ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு: 5 கட்ட தேர்தல்

ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 30-ம் தேதி முதல் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதாகவும் இதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 23ம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய 2 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை தக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

ஜார்கண்டில், மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

*நவம்பர் 30-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது

*டிசம்பர் 7-ம் தேதி: 2-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 12-ம் தேதி: 3-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 16-ம் தேதி: 4-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 20-ம் தேதி: 4-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

Leave a Reply