பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது: நிர்மலா சீதாராமன்

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருக்கும் நிலையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பாஜகவை போல பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் கட்சி வேறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

நேற்று விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கேடி ராகவன் வீடியோ விவகாரம் வெளியானபோது பாஜகவில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின என்பது குறிப்பிடத்தக்கது.