பாஜகவினர் போராட்டம் எதிரொலி: நெல்லை கண்ணன் அதிரடி கைது!

பாஜகவினர் போராட்டம் எதிரொலி: நெல்லை கண்ணன் அதிரடி கைது!

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சி சமீபத்தில் ஒரு கூட்டம் நடத்தியது. அதில் பேசிய நெல்லை கண்ணன், ‘பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதனையடுத்து பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் நெல்லைக் கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நெல்லைக் கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply