பாகுபலி 2 சாதனையை முறியடித்த விஜய்யின் மாஸ்டர்!

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய்யின் மாஸ்டர் புதிய சாதனையை படைத்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த நிலையில் பாகுபலி 2’ படத்தின் வசூலை ’மாஸ்டர்’ முறியடித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகுபலி 2 படம் தமிழகத்தில் அதிக வசூல் சாதனை புரிந்த படமாக கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்தது.

தற்போது அந்தச் சாதனையை ‘மாஸ்டர்’ படம் முறியடித்துள்ளது. இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள், மாஸ்டர் வசூல் சாதனையை சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Reply