பாகிஸ்தான் பிரதமரின் புதிய வழி! சேவாக் கிண்டல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தன்னைத் தானே அவமானப்படுத்திக்கொள்ள புதிய வழிகளை கண்டறிவதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் தனது டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நீங்கள் Bronx-ஐ (அமெரிக்க நகரம்) சேர்ந்த வெல்டர் போல பேசுகிறீர்கள்” என நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். சில தினங்களுக்கு முன்னதாக ஐ.நா சபையில் ஆற்றிய உரைக்கு பின்னர் இந்த மனிதர் (இம்ரான் கான்) தன்னைத் தானே அவமானப்படுத்திக்கொள்ள புதிய வழிகளை கண்டறிந்துவருகிறார்’ என சேவாக் குறிப்பிட்டுள்ளார்

இம்ரான்கான் தனது ஐ.நா உரையில், தீவிரவாதத்தை போற்றும் வகையில் பேசியதும், காஷ்மீரில் விரைவில் புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் அரங்கேறும் என்றும் குறிப்பிட்டதுடன், இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளலாம் என்றும் பேசியதற்கு பிறகு கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *