பாகிஸ்தான் அமைச்சரை புறக்கணித்த சர்வதேச ஊடகங்கள்

இங்கிலாந்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பாகிஸ்தான் அமைச்சர் பேச்சை தொடங்கியபோது அவரது உரையை சர்வதேச ஊடகங்கள் புறக்கணித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

லண்டன் நகரில் ’ஊடக சுதந்திரத்துக்கான பாதுகாப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, கனடா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கருத்தரங்கில் பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி அவர்களும் பங்கேற்றார்

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி பேசுவதற்கு முன்னரே அவருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் முகமது குரேஷியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கில் பங்கேற்ற அனைத்து நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்களும் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *