பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரில் போலீஸ் வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதல் ஒன்றில் 4 பேர் பலியுள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலகம் முழுவதும் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து கொண்டே உள்ளது. புல்வாமா தாக்குதல், இலங்கை தாக்குதலை அடுத்து தற்போது பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளிவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்திருப்பவர்களில் ஒருசிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது

Leave a Reply