பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் நடைபெற்ற சுகாதாரத்துறை வெற்றிடங்களுக்கான தேர்வில் ஊழல்

பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் நடைபெற்ற சுகாதாரத்துறை வெற்றிடங்களுக்கான தேர்வில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக வெளியான புகார்களையடுத்து அத்தேர்வை ஒத்திவைக்குமாறு முதல்வர் காலித் குர்ஷிட் கான் உத்தரவிட்டுள்ளார்.

கில்கிட் பால்டிசானைச் சேர்ந்த பெண்கள் பாடசாலையில் இத்தேர்வுக்கான பரீட்சை நடைபெற்றபோது கேள்வித்தாள்கள் ஏற்கனவே கசிந்துவிட்டதாகவும், பரீட்சார்த்திகள் ஸ்மார்ட் போன்களுடன் மண்டபத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் வெளியே ஆர்ப்பாட்டங்கள் நடைபெறத் தொடங்கின.

பின்னர் மாகாண முதல்வர் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. எந்தவிதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுமின்றி இப்பரீட்சை நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளையடுத்தே பரீட்சை பின்போடப்பட்டது.