பவுலர் தடுக்கி விழுந்ததால் பேட்டிங் செய்தவர் அவுட் ஆன விந்தை!

மகளிர் பிக்பேஷ் கிரிக்கெ போடி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இன்று அடிலைட் அணியும், பிரிஸ்பேன் அணியும் மோதியது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 141 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த பிரிஸ்பேன் அணி 17.1 ஓவரில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 142 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இந்த போட்டியில் அடிலெய்டு அணி பேட்டிங் செய்யும்போது கடைசி பந்தில் பவுலர் ரன் அவுட் செய்யும் முயற்சியில் பந்தை பிடிக்க போனார். அப்போது அவர் தவறி கீழே விழுந்தார். இருப்பினும் அவரது கை பந்தில்பட்டு ஸ்டெம்பில் பட்டதால் பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆனார். எதிர்பாராத இந்த விக்கெட்டால் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

Leave a Reply