பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?

பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கலாமா?

தினமும் ஒரு பழவகைகள் சாப்பிட வேண்டும் என மருத்துவர்களும், உடல்நல காப்பவர்களும் கூறும் அறிவுரை. ஆனால் அதே நேரத்தில் பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என்று ஒருசிலர் கூறுவதுண்டு. அது உண்மையா? என்பதை தற்போது பார்ப்போம்

ஆம், பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பது உண்மைதான். அதற்கான காரணங்களை பார்ப்போம்

அனைத்து பழங்களிலும் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் அதிகம் உள்ளன. அவை செரிமானம் ஒழுங்காக நடைபெறுவதற்கு உதவுகின்றன. உடல் அமைப்பும் பல்வேறு வகையான செரிமான நொதிகளை உற்பத்தி செய்கின்றன.

அதிலும் வயிற்றில் இருந்து உற்பத்தியாகும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் உணவு பொருட்கள் எளிதாக செரிமானம் ஆவதற்கு வழிவகை செய்யும். ஆனால் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால், அது அந்த அமிலத்தின் செயல்திறனை குறைத்துவிடும். அதனால் செரிமானத்திற்கு இடையூறு ஏற்பட்டுவிடும்.

* வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம். அவற்றை சாப்பிட்டதும் செரிமானம் ஆவதற்கு குடல் இயக்கங்கள் மெதுவாக நடைபெறும். அந்த நேரத்தில் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் செயல்பாடு அதிகரிக்கும். அதிக நீரை ஈடு செய்வதற்காக வயிற்றுப்போக்கு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

* பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகுவது செரிமான உறுப்புகளின் பி.எச். அளவுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். சாதாரணமாக வயிற்றில் உள்ள அமிலத்தின் பி.எச். அளவு 1.5 முதல் 3.5 வரை இருக்கும். பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகினால் அமிலத்தின் அளவை குறையச் செய்து செரிமானத்தை பலவீனமாக்கும்.

* பழங்கள் சாப்பிட்ட உடன் தண்ணீர் பருகினால் செரிமானத்தின் வேகம் குறைய தொடங்கிவிடும். சில சமயங்களில் வயிற்றில் உள்ள உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் வயிற்று பிரச்சினைகள் ஏற்படும்.

* இரைப்பை நொதிகளின் செயல்பாடும் பாதிக்கப்படும். சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு போதுமான நொதிகள் உற்பத்தியாகவில்லை என்றால் நெஞ்ெசரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

* செரிமானத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பழங்கள் சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் பருகுவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published.