shadow

பள்ளி, கல்லூரி நூலகங்களில் பகவத்கீதை: பலத்த எதிர்பால் ஜம்மு காஷ்மீர் அரசு அதிரடி

காஷ்மீரில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருது மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை மற்றும் ராமாயணம் ஆகிய நூல்களை இணைக்க கல்வி அமைச்சகம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தனது உத்தரவை திரும்பப் பெறுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர் தலைமையில் நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பகவத் கீதை, ராமாயணம் ஆகியவற்றை இணைக்க வலியுறுத்தப்பட்டது.

ஆனால், முஸ்லீம்கள் அதிகமாக வாழும் காஷ்மீரில் இந்த இரண்டு நூல்களின் திணிப்பு பிரச்சினையை உருவாக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் உமர் அப்துல்லா உள்பட பல தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்தஹ்டால் இந்த உத்தரவை கல்வித்துறை திரும்ப பெற்று கொண்டது.

Leave a Reply