பள்ளிகள் திறக்கும் தேதி: முதல்வர் அறிவிப்பு?

students

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியை நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிக்க இருப்பதாகவும் முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதனை அடுத்து மற்ற வகுப்புகளுக்கும் படிப்படியாக பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுடனும் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை செய்ய உள்ளார்

இந்த ஆலோசனையை அடுத்து தமிழகத்தில் பள்ளி திறக்கும் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது