‘பலூன்’ பக்கம் பார்வையை திருப்பிய விஜய் ரசிகர்கள்

‘பலூன்’ பக்கம் பார்வையை திருப்பிய விஜய் ரசிகர்கள்

சமீபத்தில் வெளியான அருவி படத்தில் விஜய் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய வசனம் இருந்ததால், உலகமே கொண்டாடி மகிழும் ‘அருவி’ படத்தை விஜய் ரசிகர்கள் இந்த படம் எகிப்து படத்தின் காப்பி என்ற உலகமகா உண்மையை அறிந்து டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பலூன்’ பட இயக்குனர் சினிஷ் ‘மெர்சல்’ இயக்குனர் அட்லி குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். உடனே ‘அருவி’யை விட்டுவிட்டு தற்போது விஜய் ரசிகர்கள் பலூன் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கிவிட்டனர். ‘பலூன்’ படத்தை தமிழ் ராக்கர்ஸில் மட்டுமே பார்ப்போம், தமிழ் ராக்கர்ஸில் பலூன் படத்தின் லிங்க்கை ஷேர் செய்வோம் என்று கூறி வருகின்றனர்

இதனால் அதிர்ச்சி அடைந்த இயக்குனர் சினிஷ், தான் விஜய்யை விமர்சனம் செய்யவில்லை என்றும், தனது படத்திற்கு விஜய் ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துவ் அருகிறார்

Leave a Reply