பரோலில் வரும் சசிகலாவுடன் அமைச்சர்கள் சந்திப்பா?

பரோலில் வரும் சசிகலாவுடன் அமைச்சர்கள் சந்திப்பா?

சற்றுமுன்னர் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா, தற்போது கார் மூலம் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார். சசிகலா சென்னை வந்தவுடன் அவரை அமைச்சர்கள் சந்திக்கலாம் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக சசிகலா சென்னை வந்தவுடன் அவரை நேரில் சந்திப்பேன் என்று ஓ.எஸ்.மணியன் கூறியிருந்தார்

இந்த நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த அமைச்சர் ஜெயகுமார்,’ சசிகலாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டார்கள் என்றும் ஓ.எஸ்,மணியன் சசிகலாவை சந்திப்பார் என்று வெளிவந்துள்ள தகவல் தவறானது என்றும் கூறியுள்ளார்

மேலும் சசிகலா பரோலில் வெளியே வந்துள்ளது தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.