பரூக் அப்துல்லா குறித்த வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

பரூக் அப்துல்லா குறித்த வைகோவின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து ஆஜர்படுத்த் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது

காஷ்மீர் மாநிலத்தில் 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டபோது முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்பட ஒருசிலரை வீட்டுக்காவலில் வைத்தனர்

இந்த நிலையில் பரூக் அப்துல்லா எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த வேண்டும் என்றும், வைகோ ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது வைகோவின் ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

Leave a Reply