சென்னையில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் தற்போது குணமாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் ஓரளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் ஒன்றாம் தேதி நடக்க இருக்கும் நிலையில் இந்த மாணவர் திடீரென கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளதால் இந்த மாணவர் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

இருப்பினும் இந்த மாணவருக்கு மட்டும் கொரோனா வார்டிலேயே தேர்வு வைக்க் வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது

Leave a Reply