பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு: பள்ளிக் கல்வித்துறை

பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு: பள்ளிக் கல்வித்துறை

வேலைநிறுத்தத்தை கைவிட்டு இன்று பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்து வருவதால் அரசு பள்ளி மாணவ, மாணவியர் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டம் செய்து வரும் ஆசிரியர்கள் இன்றுக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கெடு விதித்துள்ளது இதனையடுத்து இன்று பள்ளிக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் திரும்ப வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பணிக்கு ஆசிரியர்களை ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் தடுத்தால் ஆசிரியர்கள் முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் தொலைபேசியில் புகார் அளிக்கலாம் என்றும், புகார்கள் வந்தால் காவல் நிலையத்தில் பதிவு செய்ய கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

Leave a Reply