பணம் எடுக்க இனி ஏடிஎம் கார்ட் தேவையில்லை: எஸ்பிஐ அறிவிப்பு

வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க இனி ஏடிஎம் கார்டு தேவையில்லை என்றும் 6 இலக்க ரகசிய எண் போதும் என்ற புதிய வசதியை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது

யோனோ மொபைல் ஆப்ஸ் என்ற செயலியை டவுன்லோடு செய்து அதில் 6 இலக்க ரகசிய எண்ணை பதிவு செய்து யோனோ கேஷ் பாயிண்ட் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் செண்டரில் ஏடிஎம் கார்டு இல்லாமல் அந்த ரகசிய எண்ணை வைத்தே பணம் எடுத்து கொள்ளும் புதிய வசதியை எஸ்பிஐ அறிவித்துள்ளது. இதன் மூலம் போலி ஏடிஎம் கார்டுகளால் நடக்கும் மோசடிகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

எஸ்பிஐ வங்கியின் இந்த புதிய அறிவிப்புக்கு வாடிக்கையாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply