பட்டைய கிளப்பும் ரஜினியின் ‘பேட்ட’ டீசர்

பட்டைய கிளப்பும் ரஜினியின் ‘பேட்ட’ டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளதூ.

ரஜினியுடன் விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, பாபிசிம்ஹா என பெரும் நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டீசர், ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வரும் பொங்கல் தினத்தில் வெளிவரவுள்ள இந்த படத்தின் டிரைலரும் மிக விரைவில் வெளிவரவுள்ளதாக இந்த டிசரின் இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்னும் சில நாட்களில் இன்னுமொரு விருந்து ரஜினி ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது.

Leave a Reply