shadow

பட்டு நூல்களில் காதணி, வளையல்: இன்றைய பெண்களின் டிரண்ட்

காதணி, வளையல் உள்பட பெண்கள் அணியும் ஆபரணங்கள் தங்கம் உள்பட ஒருசில உலோகங்களில் மட்டுமே வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது பட்டு நூல் கொண்டு செய்யப்படும் காதணி, நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட் போன்றவைகளுக்கு அதிக வரவேற்பு பெண்கள் மத்தியில் உள்ளது.

விலை மதிப்புமிக்க பட்டு நூல் சேலையாக அணியும் பெண்கள் பட்டு நூல் ஆபரணத்தையும் மேட்சாக அணிய தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அதிகபட்ச அழகியலுடன் கூடிய பட்டு நூல் நகை தயாராகின்றன.

முற்றிலும் பட்டு நூல் கொண்டு நெக்லஸ் வடிவமைப்பு மேற்கொள்ளாது நடுநடுவே சிறு மணிகள், கற்கள், முத்துக்கள் இணைக்கப்பட்டவாறு நெக்லஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிறு மணி குஞ்சரங்கள் இணைந்த பட்டு நூல் நெக்லஸ்-யின் அதே அமைப்பிலான காதணி மற்றும் வளையல்கள் போன்றவை செட்-ஆக உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

உலோக மணிகளுடன் கூடிய மாலைகள், அழகிய பட்டு நூல் ஜிமிக்கிகள், வண்ண பிரகாசத்துடன் வளையல்கள் ஆகியவை இளம்பெண்களை கவர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply