பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய தனுஷ் ரசிகர்: போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியான நிலையில் இந்த மோஷன் போஸ்டரை கொண்டாடும் விதமாக தனுஷ் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் ஈடுபட்டிருந்தனர்

இந்த நிலையில் நெல்லை அருகே உடையார்பட்டி என்ற பகுதியை சேர்ந்த தனுஷ் ரசிகர் ஒருவர் அங்கிருந்த தியேட்டர் முன்பு ’ஜகமே தந்திரம்’ மோஷன் போஸ்டரை கொண்டாடும் விதமாக கேக் ஒன்றை 3 அடி பட்டா கத்தியால் வெட்ட முயன்றார்

கடந்த சில மாதங்களாகவே ரவுடிகளும் மாணவர்களும் பட்டாக் கத்திகளால் கேக் வெட்டும் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ள நிலையில் இதனை ஏற்கனவே போலீசார் எச்சரித்துள்ளனர் இருப்பினும் எச்சரிக்கையை மீறி தனுஷ் ரசிகர் பட்டாக்காத்தியால் கேக் வெட்ட முயற்சித்ததால் போலீசார் அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர் முதல்கட்ட விசாரணையில் அந்த ரசிகர் பெயர் செந்தில் என்றும் அவருக்கு எச்சரிக்கை எச்சரித்து அனுப்பி உள்ளதாகவும் தெரிகிறது.

Leave a Reply