பட்டம் பெற வேண்டிய மாணவர்கள் கையில் பட்டா கத்தியா? தமிழிசை வேதனை

கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் கையில் கத்தி மற்றும், பட்டாக்கத்தியவுடன் வன்முறையில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் பெரும் கவலையை அளித்து வரும் நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது

கத்தி கத்தி படிக்க வேண்டிய மாணவர்கள் கத்தியுடன் படிக்கின்றனர் என்றும் பட்டம் பெற வேண்டிய மாணவர்கள் பட்டாக்கத்தியுடன் படிக்கின்றனர் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் மாணவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் அளித்து மாணவர்கள் இனிமேலும் வன்முறையில் ஈடுபடாத வகையில் அறிவுறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply