வனத்துறையினர் பிடித்து உணவு வைத்ததால் பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகே உள்ள காட்டு பகுதியில் இருந்து திடீரென ஊருக்குள் புகுந்த குரங்கு ஒன்று அப்பகுதியில் உள்ள மக்களை கடித்து குதறியதாக தெரிகிறது

இது குறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினர் மீது புகார் அளித்தனர். உடனே களத்தில் இறங்கிய வனத்துறை அதிகாரிகள் கூண்டு வைத்து அந்த குரங்கை பிடித்தனர் காட்டில் பசியுடன் இருந்த அந்த குரங்கு மனிதர்களிடம் இருந்து எதையாவது பிடுங்கி சாப்பிடுவதற்காக கிராமத்திற்குள் வந்துள்ளதாக தெரியவந்தது

இதனையடுத்து அந்த குரங்குக்கு தேவையான சாப்பாடு அளித்த வனத்துறையினர் அதை மீட்டு காட்டில் கொண்டு சென்று விடுவதற்கு முடிவு செய்துள்ளனர் பசியின் கொடுமை காரணமாக குரங்கு ஒன்று ஊருக்குள் வந்து மனிதர்களை கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply