பகுஜன் சமாஜ் எம்.பி திடீரெ தலைமறைவால் பெரும் பரபரப்பு

பகுஜன் சமாஜ் எம்.பி திடீரெ தலைமறைவால் பெரும் பரபரப்பு

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கோசி என்ற தொகுதியில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பி திடீரென தலைமறைவாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அதுல்ராய் என்பவர் கோசி தொகுதியில் 5,73,829 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். இந்த நிலையில் இவர் மீது பாலியல் வழக்கு ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் சற்றுமுன் உச்சநீதிமன்றத்தில் அதுல்ராய் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆனதை அடுத்து பகுஜன் சமாஜ் எம்.பி அதுல்ராய் திடீரென தலைமறைவு ஆகியுள்ளார்.

Leave a Reply