நேற்று டிரைலர், இன்று டீசர்: அடுத்தடுத்து டிரெண்ட் ஆகும் விஜய்சேதுபதி படங்கள்

நேற்று டிரைலர், இன்று டீசர்: அடுத்தடுத்து டிரெண்ட் ஆகும் விஜய்சேதுபதி படங்கள்

விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் அருண்குமார் இயக்கிய ‘சிந்துபாத்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடித்த இன்னொரு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதுதான் விஜய்சேதுபதி முதல்முறையாக நடித்த மலையாள படமான ‘மார்கோனி மாதாய்’ என்ற படம்

இந்த படத்தின் டீசரில் விஜய்சேதுபதி, தமிழ், மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பேசியுள்ளார். வானொலி குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் ஜெயராம் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ‘சிந்துபாத் டிரைலரும், ‘மார்கோனி மாதாய்’ டீசரும் அடுத்தடுத்து வெளியாகி சமூக வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் டிரண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply