நேற்று சந்திரசேகரராவ், இன்று சந்திரபாபு நாயுடு: திமுகவின் திட்டம் தான் என்ன?

நேற்று சந்திரசேகரராவ், இன்று சந்திரபாபு நாயுடு: திமுகவின் திட்டம் தான் என்ன?

நேற்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். மூன்றாவது அணி அமைக்கவே இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டது.

ஆனால் சற்றுமுன்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் நேற்று சந்திரசேகரராவ், இன்று அவருடைய அரசியல் எதிரி சந்திரபாபு நாயுடு ஆகியோர்களை திமுக தலைவர்கள் சந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply