shadow

நேபாளம் பாராளுமன்ற தேர்தல்: ஆளும் கட்சி அமோக வெற்றி

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாள நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் நேற்று அங்கு வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளூம் ளும் இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் பெருமளவில் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுவரை வெளியான 165 மாகாணசபை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி 81 இடங்களில் ஆளும் கட்சி வேட்பாளர்களும், ஆளும் கட்சியுடன் கூட்டணி கட்சியான நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் 35 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் வேட்பாளர்கள் 21 இடங்களிலும், நேபாளம் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் 12 இடங்களிலும் மற்ற 12 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

மீதமுள்ள 100 தோகுதிகளுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை எனினும், இதுவரை வெளியான முடிவுகளை வைத்து பார்க்கும் பொழுது ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply