நெல்லை கண்ணன் தனிநபரல்ல: சீமான் எச்சரிக்கை

நெல்லை கண்ணன் தனிநபரல்ல: சீமான் எச்சரிக்கை

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சமீபத்தில் நெல்லை கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெல்லை கண்ணன் பேச்சு குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:

பெருமதிப்பிற்குரிய அப்பா தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களின் பேச்சு சனநாயகத்தின் வழியே பாசிசத்தை கட்டமைக்க முயலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கொடுங்கோல் ஆட்சி முறைக்கெதிரான அறச்சீற்றமே!

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து, மதத்தால் நாட்டை துண்டாட முயலும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும் என்பதே அப்பேச்சின் நோக்கம். அது வன்முறையைத் தூண்டுவதாக கைது செய்யக்கோருவது அறிவிலித்தனமானது. தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் தனிநபரல்ல! ஒட்டுமொத்த தமிழர்களின் சொத்து! என்று கூறியுள்ளார்.

Leave a Reply