நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ்கால்: ஜியோவின் புதிய முயற்சி

நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ்கால்: ஜியோவின் புதிய முயற்சி

இந்தியாவில் டெலிகம்யூனிகேசன் துறையில் புதிய சரித்திரம் படைத்த ஜியோ, வாய்ஸ் ஓவர் வைபை என்னும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் இந்த சேவை அடுத்த சில மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ வோ வைபை (வாய்ஸ் ஓவர் வைபை) எனும் சேவையை சோதனை செய்கிறது. புதிய வைபை சேவை .சோதனை வெற்றி பெற்றால் மொபைல் நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனை முயற்சி முடிந்ததும் முதற்கட்டமாக ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்குகளில் மட்டும் இந்த சேவை வழங்கப்பட்டு அதன் பின் மற்ற நெட்வொர்க்குகளிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி ஜியோபோன்களிலும் இந்த சேவை வழங்கப்படலாம்.

 

Leave a Reply

Your email address will not be published.