நூலகர் தேர்வு தேதி மாற்றம்

நூலகர் தேர்வு தேதி மாற்றம்

நூலகர் தேர்வுக்கான தேதி மார்ச் 30-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) செயலாளர் நந்தகுமார் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த நவம்பர் 11-ஆம் தேதி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த 17-இல் வெளியானது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு முதன்மை எழுத்துத் தேர்வு வரும் வரும் பிப்ரவரி 23-இல் நடைபெறுகிறது.

நூலகர் தேர்வு: இதனிடையே, பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நூலகர் தேர்வு பிப்ரவரி 23-இல் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. குரூப் 2 முதன்மைத் தேர்வு காரணமாக, நூலகர் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. தொழில் மற்றும் வணிகத் துறை, வேளாண்மை, அண்ணா நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பிப்பரவரி 23-ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 30-இல் நடத்தப்படும்.

இதேபோன்று, தொல் பொருளியல் துறையிலும் காலியாகவுள்ள நூலகர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 24-ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 31-இல் நடைபெறும். இந்தத் தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெறும்.

Leave a Reply