நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: வேலைக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்

நீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: வேலைக்கு திரும்பும் அரசு ஊழியர்கள்

ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்பவில்லை என்றால் ஒரு மணி நேரத்தில் பணியிலிருந்து நீக்க முடியும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது.

மேலும் போராட்டத்தைக் கைவிட்டால் செப்டம்பர் 22-ம் தேதிக்குள் போராட்டக்காரர்களைச் சந்திக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடுகிறோம் என்றுன் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையை அடுத்து இன்று அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பியுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

 

Leave a Reply

Your email address will not be published.