நீதிமன்ற உத்தரவை இரவோடு இரவாக நிறைவேற்றிய முதல்வர்: ஆச்சரியத் தகவல்

டெல்லியில் வன்முறை நடந்த இடங்களுக்கு நேரில் சென்று முதல்வர் பார்வையிட வேண்டும் என நேற்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நேற்று இரவோடு இரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் வன்முறை நடந்த இடத்தை பார்வையிட்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது

டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 24 மணி நேரமும் உதவி எண்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட அடுத்து டெல்லி அரசு நேற்று உதவி எண்களையும் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் நீதிமன்ற உத்தரவின்படி கலவரத்தில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கு உரிய பாதுகாப்பு அளிக்க டெல்லி காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீதிபதியின் உத்தரவை நேற்று இரவோடு இரவாக அந்த உத்தரவுப்படி நடந்துகொண்ட டெல்லி முதல்வருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *