நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் பிழையை திருத்த மீண்டும் ஒரு வாய்ப்பு!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்ட பிழைகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், அதையும் மீறி பிழைகள் இருந்தால் மாணவர்கள் மே 3ஆம் தேதிக்குள் ஹால் டிக்கெட்டை சரி செய்துகொள்ள வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது

நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் கடந்த ஆண்டு அதிக பிழைகள் இருந்ததால் இந்த ஆண்டு முன்கூட்டியே அவ்வாறு பிழைகள் இருந்தால் திருத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது

இந்த நிலையில் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட பிழைகள் திருத்தப்பட்டுவிட்டதாகவும் இன்னும் பிழைகள் இருந்தால் மே 3ஆம் தேதிக்குள் மாணவர்கள் திருத்தி கொள்ளலாம் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஆங்கில வழியில் தேர்வு எழுதும் சிலருக்கு மட்டும் அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

Leave a Reply