நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தினம்: நீட்டிக்கப்பட வாய்ப்பா?

neet-exam

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தினம் என்பதால் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 13-ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று கடைசி தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்குள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டிருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பிக்கவில்லை என்பதால் தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது

ஆனால் ஏற்கனவே ஒருமுறை விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருக்காது என்றே கருதப்படுகிறது. எனவே இன்று மாலை போல் அனைத்து மாணவர்களும் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்