நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: சிக்கியவர்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி ஒற்றுமை!

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: சிக்கியவர்கள் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி ஒற்றுமை!

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் உதித் சூர்யாவை அடுத்து அடுத்தடுத்து பல மாணவர்கள் சிக்கி வரும் நிலையில் சிக்கியவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை இருப்பதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2015 – 2016-ம் ஆண்டில் கேளம்பாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரியில் 150 மாணவர்கள் படித்து கொண்டிருந்தனர். ஆனால் திடீரென அந்த கல்லூரியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என கூறி இந்திய மருத்துவ கவுன்சில் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்தது.

இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின்படி 150 மாணவர்களில் 108 மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படித்தனர்.

ஆனால் மீதியுள்ள 48 மாணவர்கள் ஒருசில காரணங்களால் படிப்பை தொடர முடியவில்லை. தற்போது ஆள்மாறாட்ட விவகாரத்தில் சிக்கி வரும் மாணவர்கள் அனைவரும் இந்த 48 பேர்களில் ஒருவராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆள்மாறாட்டம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இர்பான், மாணவி அபிராமி உட்பட 4 மாணவர்களும் இந்த 48ல் நால்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பிற மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.,

Leave a Reply