நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை மாணவி கைது! திடுக்கிடும் தகவல்

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை மாணவி கைது! திடுக்கிடும் தகவல்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் தேனி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த உதித் சூர்யா உள்பட ஒருசில மாணவர்களும் அவர்களது தந்தைகளும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் இன்னும் ஒருசில மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிக்குவார்கள் என்றும் இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் சிபிசிஐடி போலீஸ் தரப்பில் இருந்து செய்திகள் வெளிவந்தன

இந்த நிலையில் நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னை தனியார் மருத்துவ கல்லூரி மாணவியான பிரியங்கா என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தனியார் மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்த மாணவி பிரியங்காவை தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின் சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளது. மாணவி பிரியங்காவின் கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply