நீங்கள் தான் கொரோனாவை எதிர்த்து களத்தில் நிற்கும் தளபதி: பிரதமர் மோடி

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது பிரதமர் மோடி தலைமை ஏற்ற இந்த கூட்டத்தில் அவர் மாநில முதல்வர்களுக்கு கூறிக்கொண்டதாவது:

மாவட்ட அளவில் வெற்றி கொள்ளும் போது நாடுகள் வெற்றி கொள்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவருக்கும் மிக முக்கிய பங்கு உள்ளது

நீங்கள் தான் கொரோனாவை எதிர்த்து களத்தில் நிற்கும் தளபதி. கொரோனாவுகு எதிரான நமது போராட்டம் என்பது ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே.

தடுப்பூசி தான் பிராண சக்தி மிகுந்த ஆயுதம். கொரோனாவை வெல்ல ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்