நிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகளுக்கான புதிய தூக்கு தேதி: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த தண்டனையை நிறைவேற்றாமல் பல மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

குற்றவாளிகள் தரப்பில் இருந்து மாறி மாறி தாக்கல் செய்த மனுக்களால் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஆனது. நிர்பயாவின் தாயார் உள்பட பலர் இதனால் அதிருப்தி அடைந்த நிலையில் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட தூக்கு தண்டனை தற்போது மார்ச் 3ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இதனை அடுத்து அன்றைய தினம் நால்வரும் தூக்கிலிட படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply