நிர்பயா குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு: தூக்கு உறுதி

 

நிர்பயா குற்றவாளிகள் நால்வரும் அடுத்தடுத்து கருணை மனுக்களை பதிவு செய்து தூக்கு தண்டனையிலிருந்து கடந்த சில மாதங்களாக தப்பித்து வரும் நிலையில் தற்போது நிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவனின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அதிரடியாக இந்த மனுவை நிராகரித்துள்ளார். குற்றவாளிகளை 4 பேரின் கருணை மனுக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதால் அவர்களின் தூக்கு தண்டனை கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது
இதனை அடுத்து குற்றவாளிகள் நால்வரின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் செய்தி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இனிவரும் தேதியிலாவது அவர்களை தூக்கில் போட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply