நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. இந்தியா பேட்டிங்

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி.. இந்தியா பேட்டிங்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது

சற்று முன் வரை இந்திய அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளன.