நியூசிலாந்திலும் தொடரும் வெற்றி: இந்திய அணி அபாரம்

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் அந்நாட்டு அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதால் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் அடித்தனர். முன்ரோ 59 ரன்களும் டெய்லர் 54 ரன்கள் வில்லியம்சன் 51 ரன்களும் எடுத்தனர்

இந்த நிலையில் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. கேஎல் ராகுல் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 58 ரன்களும், கேப்டன் விராத் கோலி 45 ரன்களும் எடுத்ததால் இந்திய அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது

இதனை அடுத்து 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply