நிதி பற்றாக்குறை: இம்ரான்கான் அலுவலகத்தில் மின்சாரம் துண்டிப்பு

லட்சக்கணக்கில் மின்சார கட்டணம் பாக்கி உள்ளதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அலுவலகத்தின் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பாகிஸ்தானின் ஆண்டு நிதி பற்றாக்குறை கடந்த மூன்று தசாப்தங்களில் மிக உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளதாகவும், இந்த பற்றாக்குறை 2018-19 நிதியாண்டில் 8.9 சதவீதமாக உள்ளதாகவும் செய்தி வெளிவந்துள்ளது

மேலும் நிதிப் பற்றாக்குறை என்பது மத்திய அரசின் வருவாய்க்கும் செலவினங்களுக்கும் உள்ள வித்தியாசமாகும். ஜூன் மாதத்தில் முடிவடைந்த ஆண்டில் பற்றாக்குறை பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 6.6 சதவீதமாக இருந்தது என்று டான் நாளிதழ் தெரிவித்துள்ளது.

Leave a Reply