நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் பாராட்டு

இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்ததில் பெருமை அடைவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பாராட்டினார்.

மாநிலங்களவையில் இன்று பேசிய ப.சிதம்பரம், பாரதியார் பாடலைக் குறிப்பிட்டு பாராட்டியதுடன், நிதியமைச்சர் தமிழர் என்பதால் இரட்டை மகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார்.

மேலும் கர்நாடகா, கோவா மாநிலங்களில் ஆளும் அரசுக்கு எதிராக அரசியல் குழப்பங்களை உருவாக்குவது பொருளாதார இலக்குகளை பாதிக்கும் என்று மாநிலங்களையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடும் கன்டனம் தெரிவித்தார். ஜனநாயகப் படுகொலைகளை உலக நாடுகள் கவனித்து வருவதால் முதலீடுகள் பாதிக்கும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

Leave a Reply