நிதித்துறையை சீர்செய்ய நிர்மலா சீதாராமனின் அதிரடி அறிவிப்பு

நிதித்துறையை சீர்செய்ய நிர்மலா சீதாராமனின் அதிரடி அறிவிப்பு

இந்திய பொருளாதார நிலை அதள பாதாளத்தில் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இன்று செய்தியாளர்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில அதிரடி அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவை பின்வருவன:

* இந்திய பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும்

* வரி சீர்திருத்தங்கள், தொழிலாளர் துறை சீர்திருத்தங்களும் தொடரும்

* பொதுத்துறை நிறுவனங்களின் செலவுகளை மத்திய அமைச்சரவை கண்காணிக்கும்

* அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களும் நிறைவேற்றப்படும்

* பெரு நிறுவனங்கள் முதலீடுகளை திரட்டுவதற்கு ஆர்பிஐ விதிகள் தளர்த்தப்படும். முதலீடு செய்வதற்கு ஆதார் அடிப்படையிலான கேஒய்சியும் தளர்த்தப்படும்

* சிறு நிறுவனங்களின் ஜிஎஸ்டி நிலுவைகள் 30 நாட்களில் அளிக்கப்பட்டு வருவதால் திரும்ப வர வேண்டிய ஜிஎஸ்டி பற்றி சிறு நிறுவனங்கள் கவலையடைய வேண்டாம்

* நிதி நிறுவனங்களில் ​விரைவாக, எளிதாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published.