நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணின் தாயார் கொலை!

நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணின் தாயார் கொலை!

தனக்கு நிச்சயம் செய்த பெண்ணை திருமணம் செய்து வைக்க மறுத்த பெண்ணின் தாயாரை இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை கிண்டி பகுதியில் வசித்து வரும் கார் டிரைவர் வினோத் என்பவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணும்க்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் நிச்சயதார்த்தம் நடந்து பல மாதங்கள் ஆகியும் இவர்களது திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. டிரைவர் வினோத் நடவடிக்கைகள் சரியில்லை என்பதால் அவருக்கு பெண் கொடுக்க ஜீவிதாவின் பெற்றோர்கள் யோசித்து வந்தனர்.

இந்த நிலையில் தனக்கு நிச்சயம் செய்த ஜீவிதாவை உடனடியாக திருமணம் செய்து கொடுக்குமாறு நேற்று ஜீவிதாவின் தாயார் ரேவதியிடம் வினோத் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் முற்றியதால் ரேவதியை வினோத் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ரேவதியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய வினோத்தை தேடி வருகின்றனர்.

Leave a Reply