நாளை முதல் 12 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை: அதிகாரபூர்வ அறிவிப்பு

நாளை முதல் 12 நாட்கள் கல்லூரிகளுக்கு விடுமுறை: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் நாளை முதல் ஜன.1 வரை கல்லூரிகளுக்கு விடுமுறை என சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ், ஊரக உள்ளாட்சி தேர்தல், புத்தாண்டு காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படினும், தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் திமுக சார்பில் வரும் 23ஆம் தேதி பிரமாண்டமான பேரணி நடைபெறவிருக்கும் நிலையில் இந்த பேரணியில் மாணவர்களும் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

Leave a Reply