’நாளை முதல் தமிழக பள்ளிகளுக்கும் பொங்கல் விடுமுறையா? அமைச்சர் செங்கோட்டையன்

’நாளை முதல் தமிழக பள்ளிகளுக்கும் பொங்கல் விடுமுறையா? அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறையாக ஜனவரி 15, 16, 17 மற்றும் சனி, ஞாயிறு 18, 19 ஆகிய ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வெளியூர் செல்லும் மாணவர்களின் வசதியை முன்னிட்டு 13ம் தேதி முதலே தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன

பக்கத்து மாநிலமான புதுவையில் திங்கள் முதல் பொங்கல் விடுமுறை விடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ’பொங்கல் விடுமுறையாக வரும் 13ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளார்

எனவே நாளை முதல் பொங்கல் விடுமுறையா என்ற அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.