நாளை முதல் ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் தொடங்கி வைக்கின்றார்.

நாளை முதல் ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் தொடங்கி வைக்கின்றார்.

சென்னை உள்பட இந்தியாவின் பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாளை முதல் ஐதரபாத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ளது. இந்த சேவையை நாளை பாரத பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கின்றார்.

ஐதராபாத்தில் நாளை முதல் மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என்பதை ஆந்திர அமைச்சர் ராமாராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

முதல் கட்டமாக நாகோல் முதல் மியாமியாபூர் வரையிலான சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை பணிகள் நிறைவடைந்துள்ளன.

ஐதராபாத் மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். அதன்பின்னர், மறுநாள் காலை 6 மணி முதல் மெட்ரோ ரெயில் சேவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது என தெரிவித்துள்ளார்.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும். விசேஷ நாள்கள் உள்பட முக்கிய நாள்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Leave a Reply