’நாய் சேகர்’ ரிலீஸ் அறிவிப்பு!

அஜித் நடித்த வலிமை திரைப்படம் உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் ’நாய்சேகர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

’நாய் சேகர்’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் என்றும் சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பதை அடுத்து இந்த படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.