நான் குழந்தை இல்ல, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு: குழந்தைத்தனமாக பேசிய அனிதா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அனிதா, சோமசேகர் மற்றும் ஆரியிடம் சண்டை போட்டது படு செயற்கையாக இருந்தது

இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது என்னுடைய பேச்சை யாருமே கேட்க மாட்டேன் என்கிறீர்கள் நான் குழந்தை இல்லை நான் எனக்கும் திருமணமாகி விட்டது என் வீட்டில் நான் தான் முடிவு எடுப்பேன் என் பேச்சை கேளுங்கள் என இடை விடாமல் பேசிக்கொண்டே இருந்து அதன் பின்னர் திடீரென அனிதா அழுதது பார்வையாளர்களுக்கு எரிச்சலை ஊட்டியது

நான் குழந்தை இல்லை எனக்கு கல்யாணம் ஆயிருச்சு நானும் பொம்பளைதான என் பேச்சை கேளுங்க என்று சொல்லிக் கொண்டே இருந்தாரே தவிர அவர் என்ன பேச வந்தார் என்பதை கடைசி வரை சொல்லவே இல்லை என்பதுதான் பார்வையாளர்களின் எரிச்சலுக்கு காரணமாக இருந்தது

ஆரியும் ‘நீ என்ன சொல்ல வருகிறாய், சொல் என பலமுறை கூறியும் தான் குழந்தை இல்லை என் பேச்சை கேட்க மாட்டேங்கிறீங்களே என்று தான் மாறி மாறி சொல்லி கொண்டிருந்தார் அனிதா என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply